Our Feeds


Wednesday, November 23, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி..!

 

22-வது உலகக் கிண்ணப் போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குழு- டி பிரிவு லீக் போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் 9 வது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஒலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஒலிவர் கிரௌட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »