Our Feeds


Thursday, November 24, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: கானாவுக்கு எதிராக வெற்றி கண்டது போர்த்துகல்..! | ரொனால்டோ சாதனை.

 

ரொனால்டோ சாதனை: கானாவுக்கு எதிராக வெற்றி

கண்டது போர்த்துகல்


கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற 3 ஆவது ஆட்டத்தில் கானாவை - போர்த்துகல் அணி 3:2 கோல்கள் விகிதத்தில் வென்றது.


குழு எச் இலுள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது.


இடைவேளை வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.


65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனாhல்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் புகுத்தினார். 


இதன்மூலம். 5 உலக்ககிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் புகுத்திய உலகின் முதல் வீரர் எனும் சாதனைக்குரியவாரானார் ரொனால்டோ.


ஆனால், 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு மத்தியில் கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் புகுத்தினார். இதனால் கோல் எண்ணிக்கை சமநிலையை அடைந்தது.


73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ரா கோல் புகுத்தி  போர்த்துகலை மீண்டும் முன்னிலைக்கு கொண்ட வந்தார். 80 ஆவது நிமிடத்தில் போர்;த்துகலின் கொன்சிகாவோ லியோ அவ்வணியின் 3 ஆவது கோலை அடித்தார். 


எனினும்,  89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி, கானாவின் 2 ஆவது கோலை புகுத்தினார்.


இதனால் இப்போட்டியில் 3:2 கோல்கள் விகிதத்தில் போர்த்துகல் வென்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »