Our Feeds


Monday, November 28, 2022

ShortTalk

#FIFA_WORLD_CUP ஸ்பெயின் – ஜெர்மனிக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.



உலகக் கிண்ண உதைபந்து தொடரில் ‘இ’ பிரிவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற ஸ்பெயின் – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.


போட்டயின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது.

போட்டியின் முடிவில் ‘இ’ பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான போட்டியை சமன் செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »