மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் மத ஸ்தலமொன்றின் தலைவர் உட்பட நால்வரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜா- எல பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி , தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த , காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அவர் தனது உறவினர் இருவரின் உதவியுடன், சம்பந்தப்பட்ட மத ஸ்தலமொன்றின் தலைவர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், சந்தேகத்தில் கைதான தலைவரின் சகோதரர் ஒருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த உடந்தையாகவிருந்த மாணவியின் உறவினர்களாவா்.
