ஆடியம்பலம் பிரதேசத்தை அச்சுறுத்திய 'பலு மூனா' என்பவரை கட்டுநாயக்க பொலிஸார் நேற்றுக் (டிச 29) கைது செய்துள்ளனர்.
பலு மூனா என்று அழைக்கப்படும் கலிங்க நளீன் மதுசங்க என்ற 26 வயதுடைய திருமணமாகாத ஆடியம்பலத்தைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார்.
இவர் வேறொரு குழுவை உருவாக்கி, வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தும் கத்திமுனையில் வாகனங்களைக் கடத்தியும் பிரதேச மக்களை அச்சத்தப்படுத்தி வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், ஹெரோயின் பாவனைக் குற்றச்சாட்டின் கீழ் 6 தடவைகள் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இவரைக் கைது செய்த பின்னர், கொழும்பு பகுதியில் இவரால் அடகு வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை கட்டுநாயக்க பொலிஸார் கைப்பற்றினர்.
