Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

வியட்நாம் தடுப்பு முகாமில் உள்ள 151 இலங்கையர்கள் நாளை இலங்கை அழைத்து வரப்படுகின்றனர்



கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 303 பேரில் 151 பேர் வியட்நாம்  நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானமூலம்  இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


கடந்த  நவம்பர் மாதம் 8ம் திகதி மியான்மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குச்செல்ல முயன்ற  இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகு  மியான்மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மைல் தொலைவில்  மூழ்கும் நிலையில்காணப்பட்டது

அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரகம் வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை  நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியேற்றப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில்  சர்வதேச புலம்பெயர் அமைப்பான    ஐ.எம்.ஓ  அனுசரணையுடன் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம்  நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »