Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

2021ல் ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் - மீண்டும் உருவான புது சர்ச்சை!



ஜப்பானில் 2021 இல் இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு தவறியமை நியாயமற்ற நடவடிக்கை என சுயாதீன விசாரணை குழுவொன்று தெரிவித்துள்ளது.


இலங்கையை சேர்ந்த லியனே சந்தமாலி என்பவர் நகோயா என்ற இடத்தில் உள்ள குடிவரவு முகாமில் 2021 இல் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்தமை தொடர்பிலேயே சுயாதீன நீதி விசாரணை குழுவொன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

2020 இல் விசா காலத்தை மீறி ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்த சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு தொடர்பில் குடிவரவு முகாம் அதிகாரிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதற்கு தவறியமை நியாயமற்ற செயல் என சுயாதீன நீதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகோயா பிராந்திய புனர்வாழ்வு நிலையத்தின் இயக்குநர் உட்பட உத்தியோகத்தர்களின் கவலையீனம் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என குற்றச்சாட்டுகளை சுமத்தலாமா என நீதித்துறையினர் ஆராயவேண்டும் என சுயாதீன விசாரணை குழு கேள்வி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை பெண் 33 வயதில் உயிரிழப்பதற்கு அதிகாரிகளின் கவலையீனம் காரணமாகயிருக்கலாம் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது உடல்நிலையை அதிகாரிகள் சோதனையிட்டிருந்தால் அவருக்கு சிகிச்சை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,எனினும் இலங்கை பெண்ணை அதிகாரிகள் திட்டமிட்டு கொலை செய்யவில்லை வேண்டுமென்றே அவரை புறக்கணிக்கவில்லை என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »