யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்ல இருக்கின்றார். இந்நிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக, மதமாற்ற கொள்கை உடையவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவித்து, அவரை யாழ். மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "சிவத் துரோகிகள் தமிழ் இனத் துரோகிகள்" உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
