Our Feeds


Friday, December 23, 2022

News Editor

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு


அமெரிக்க பிராந்தியத்தில் நிலவும் குளிரான காலநிலையால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் 79 டொலர்களாக குறைந்திருந்த மசகு எண்ணெய் விலை இன்றைய (22) நிலவரப்படி 81 டொலரை தாண்டியுள்ளது.

மசகு எண்ணெய் விலை உயர்வு வட அமெரிக்க பிராந்தியத்தை பாதிக்கக்கூடிய பனிபுயல் நிலையால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் சீனா மீண்டும் திறக்கப்படுவதால், மசகு எண்ணெய் விலை அடுத்த ஆண்டு 120 டொலராக உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »