Our Feeds


Saturday, December 24, 2022

ShortTalk

ஐக்கிய நாடுகள் அதிகாரியை அதிரடியாக வெளியேற்றியது மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா!




முன்னர் இலங்கையில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவரை, மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் அரசாங்கம், தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளரான பார்பரா மான்சி, என்பவரே அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவர் நொன் கிராடா என்ற வரவேற்கப்படாதவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக புர்கினா பாசோவில் உள்ள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன், ஈராக், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவராக பணியாற்றிய இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட பார்பரா மான்சி, புர்கினா பாசோவில் பணியாற்றுவதற்கு முன்னர், ஜிபூட்டியில் (djibouti) வதிவிட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் வன்முறையால் புர்கினா பாசோ தகர்ந்து போயுள்ளது.

வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் வன்முறையைத் தடுக்கும் அரசாங்கத்தின் திறனில் நம்பிக்கையின்மை காரணமாக இந்த ஆண்டு இரண்டு இராணுவப் புரட்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை புர்கினா பாசோ அரசாங்கம் அறிவிக்கவில்லை.

எனினும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் அவர், நாட்டின் பாதுகாப்பின்மை குறித்து கேள்வி எழுப்பியதாக வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட மான்சி, சீரழிந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிக்கடிச் சென்று வந்தார்.

புர்கினா பர்சோ அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

மான்சியை வெளியேற்றுவதற்கான முடிவு ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும், மேலும் மனிதாபிமான குழுக்கள் செயல்படுவதை கடினமாக்கும் என்று அந்த நாட்டில் உள்ள உதவி அமைப்புகள் கூறுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »