Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

டயானாவின் MP பதவி நீக்கப்பட்டால் அந்த இடம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் - SHORT NEWS - SHORT TALK நிகழ்வில் மனோ



டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்தே ஒருவர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


SHORTNEWS இன் SHORT TALK அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே மனோ இதனை தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த பாராளுமன்ற உறுப்புரிமை எமக்கே வழங்கப்பட வேண்டும். “முதலில் டயானா போகட்டும் பார்க்கலாம்.” என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.


 இன்று கொழும்பு 12, பிரின்சஸ்கேட் வீதியில் அமைந்துள்ள “ஹயா ஷாய்வாலா” உணவகத்தில் நடைபெற்ற SHORTNEWS இன் SHORT TALK அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மனோ கணேசன் கலந்து கொண்டு பல சமகால கேள்விகளுக்கு அதிரடி பதில்களை வழங்கியிருந்தார்.


மனோ கலந்துகொண்ட SHORT TALK நிகழ்ச்சியை நாளை இரவு 09.30 க்கு SHORTNEWSTv யின் யூடியுப் மற்றும் பேஸ்புக் தளங்களில் காண முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »