Our Feeds


Saturday, December 24, 2022

ShortNews

PHOTOS: போதை ஒழிப்பு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்தது அக்குரணை பிரதேச சபை




அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட ஜும்மா பள்ளிவாயல்களில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து வாரா வாரம் நடத்தத் திட்டமிடப்பட்ட போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளின் முதல் நிகழ்ச்சித் திட்டம் நேற்றைய தினம் புலுகொஹொதென்னை அஹ்ஸன் ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.


அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கலாச்சார குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை,  மஸ்ஜிதுகள் சம்மேளனத்துடன் இணைந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் சகல பள்ளிவாயல்களிலும் இந்த போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளை எதிர்வரும் வாரங்களில் நடாத்துவதற்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


PHI அதிகாரிகள், இந்தத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி வருபவர்கள், நலன் விரும்பிகள் என பல்வேறுபட்ட தரப்பினரது ஒத்துழைப்புக்கள் எமக்கு நிறைவாய் கிடைக்கப் பெறுகின்றமைக்கு பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தனது நன்றிகளை இதன் போது தெரிவித்தார்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »