Our Feeds


Saturday, December 3, 2022

ShortTalk

VIDEO: பாராளுமன்றத்தில் பஜ்ஜட் விவாதத்தில் பெண் எம்.பி.யை கன்னத்தில் அறைந்ததால் பரபரபப்பு



செனகல் நாட்டின் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி ஆளும்கட்சி பெண் எம்.பியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் நாட்டின் பாராளுமன்றத்தில் முன்தினம் வரவு-செலவுத் திட்டத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வரவு-செலவுத் திட்டத் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

இதில் ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஆமி என்டியாயே கினிபி என்பவருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்த மசோதா சாம்ப் என்ற எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சாம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பெண் எம்.பி. கினிபியின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கினிபி மிகவும் ஆக்ரோஷத்துடன் சாம்ப் மீது நற்காலியை வீசி எறிந்துள்ளார். அப்போது மற்றொரு எதிர்க்கட்சி எம்.பி. கினிபியை உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »