Our Feeds


Sunday, January 1, 2023

SHAHNI RAMEES

கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல்..!

 



திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் ஐந்து

கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து ஐந்து கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34வயது) எனவும் தெரியவருகின்றது.


சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அப்துல்சலாம் யாசீம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »