Our Feeds


Tuesday, January 17, 2023

ShortTalk

கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - கொல்லப்பட்டவர் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி!



கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் கொழும்பு 7 ரேஸ் கோர்ஸ் மைதானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், குறித்த  மாணவி அவரது காதலனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக  கருவாதோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »