Our Feeds


Thursday, January 26, 2023

Anonymous

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி புலமைப்பரிசில் சாதனை

 



பதுளை - பசறை 13ம் கட்டை பகுதியில் கடந்த 2021 மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகளான நோவா யூஜீனியா புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.


குறித்த விபத்தில் 14 பேர் பலியாகினர், சுமார் 32 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று, சித்தியடைந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம்மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

பெற்றோர் உயிரிழக்கும்போது இவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தார்.

பெற்றோரை இழந்த நிலையிலும், குறித்த மாணவி தனது முயற்சியாலும், உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களின் சிறப்பான வழிநடத்தலாலும் சாதனை படைத்துள்ளமை பாராட்டத்தக்க ஒன்றாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »