உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள 011 2860056, 011 2860059, 011 2860069 தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்.
பெக்ஸ் இலக்கங்கள் – 011 2860057, 011 2860062,
வைபர்/ வாட்ஸ்அப் – 0719160000