Our Feeds


Monday, January 2, 2023

ShortNews

பொது விளையாட்டு மைதான பெயர்ப்பலகை நடுவதற்கு சகோதர இனம் எதிர்ப்பு - வேறு தினத்திற்கு ஒத்திவைத்தார் தவிசாளர்



ஆர்.ஜெயஸ்ரீராம்.


கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை இடுவதற்கு தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்தினால் ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


குறித்த மைதானத்துக்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்னர் இருந்ததைப் போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்துக்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்துடன் தவிசாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பொலிஸார் வரவழைக்கப்பட்டு கலவரம் ஏற்படாமல் தடுத்தனர். 

இரு தரப்பினரிடமும் விடயத்தினை விசாரித்த பொலிஸார், பின்னர் குறித்த செயற்பாட்டினை நிறுத்தியதுடன் நீதி மன்ற நடவடிக்கையின் பின்னர் பெயர் பலகை இடும் செயற்பாட்டினை மேற்கொள்ளுமாறு தவிசாளரிடம் ஆலோசனை வழங்கினர்.

குறித்த விளையாட்டு மைதானம் புதுக்குடியிருப்பு கிராமசேகர் பிரிவுக்குள் வருவதாகவும் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளரின் பெயர் மைதானத்துக்கு வைக்கப்படவேண்டும் என சபை தீர்மானம் எடுக்கப்பட்டதனால் இன்றையதினம் (01) அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் சட்ட நடவடிக்கையின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் குறித்த தவிசாளரின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »