வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பியோங்யாங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று (01) அதிகாலை 2.50 மணியளவில் பெலெஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் வடகொரியா சோதனை செய்த நான்காவது பெலெஸ்டிக் ஏவுகணை இதுவாகும்.
குறுகிய தூர ஏவுகணையான இந்த ஏவுகணை, ஜப்பானின் பொருளாதார வலயத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியதாக தகவல் வெளியானது.
