Our Feeds


Tuesday, January 31, 2023

ShortNews Admin

கல்குடாவில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கசிப்பு!



கல்குடாவில் பெருந்தொகையான கசிப்பு போத்தல் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் போதை வஸ்து பாவனையையும் விற்பனையையும் கட்டுப்படுத்தும் நோக்கில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தனது பிரிவில் உள்ள பொலிஸ் நிலையம் தோரும் போதை ஒழிப்பு செயல்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரகுமாரவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய வாழைச்சேனை யூனியன் கொலனி பிரதசத்தில் நேற்று (ஜன 30) இரவு பெருந்தொகையான  கசிப்பு போத்தல் கைப்பற்றப்பட்டன.


கல்குடா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி கே.வினோத் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளான 4201 எம்.எல்.எம்.முஹைதீன், 11,495 பண்டார, 101252 நோரஜன், பெண் பொலிஸ் அதிகாரி 10670 தில்ருக்ஸி அடங்களான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 47,500 மில்லி லீற்றர் கசிப்பு, 101,400 மில்லி லீற்றர் கோடா, வடி சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் உட்பட ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நடாத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்திவெளி, பேத்தாளை, வாழைச்சேனை, கல்குடா, கண்ணகிபுரம், கும்புறுமூலை போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு தயாராக இருந்த நிலையிலயே இவை கைப்பற்றப்பட்டதாக கல்குடா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி கே.வினோத் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »