Our Feeds


Wednesday, January 4, 2023

ShortTalk

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு முன் மண்டியிட வேண்டாம் - சிறையிலிருந்து பொதுமக்களிற்கு வசந்த முதலிகே பகிரங்க கடிதம்.



அரசாங்கத்தின் ஒடுக்குமுறை திட்டத்தின் முன்னால் பொதுமக்கள் மன்றியிடக்கூடாது என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பொதுமக்களிற்கான பகிரங்க கடிதத்தில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை திட்டம் மற்றும் தற்போது காணப்படும் பொருளாதார அழுத்தம் ஆகியவற்றின் முன்னால் பொதுமக்கள் மன்றியிடக்கூடாது அரகலயவை தொடரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது திறமையின்மையை மறைப்பதற்காக அரசாங்கம் அரகலயவிற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது நோக்கத்துடன் அல்லது நோக்கமின்றி அரசாங்கத்தை பாராட்டுபவர்கள் அரகலய தலைமைத்துவம் அற்றது நோக்கம் அற்றது என விமர்சிக்கின்றனர் என வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விமர்சனங்கள் மத்தியில் மக்கள் இவ்வாறான முறைப்பாடுகளிற்கு அனுமதியளிக்க கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,எங்கள் நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் வெற்றிகரமான மக்கள் போராட்டம் இதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022 இல் ஆரம்பிக்கப்பட்ட அரகலய பாரிய போராட்டத்தின் ஆரம்பம் எனவும் பொதுமக்களிற்கான தனது பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ள வசந்த முதலிகே இந்த இயக்கம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர்கள் அரகலயவின் இறுதி வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என தெரிவித்துள்ள வசந்த முதலிகே தங்களின் பலம் சக்தி குறித்து 

மக்களின் நம்பிக்கையை அதிகரித்தமை ராஜபக்ச குடும்பம் தோற்கடிக்கப்பட்டமை,இனம் மற்றும் மதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டமை போன்றவை அரகலயவினால்  கிடைத்துள்ள வெற்றிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்று சாதனைகளுடன் 2022 முடிவிற்கு வருகின்றது 2023 ஆரம்பமாகின்றது இந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து அரகலயவை இறுதி வெற்றியை நோக்கி கொண்டு செல்லவேண்டும் எனவும வசந்த முதலிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாழ்வதற்கான உங்கள் உரிமைக்காக அரகலயவை தெரிவு செய்யுமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கின்றேன் அரசாங்கத்தின் பொருளாதார ஒடுக்குமறை அழுத்தங்களிற்கு அடிபணியவேண்டாம்,ஒழுங்கமைக்கப்பட்ட  விதத்தில் நிபந்தனையற்று வீதிகளிற்கு செலலுங்கள் நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக போராடுவோம் எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »