Our Feeds


Tuesday, January 24, 2023

ShortTalk

புனித அல்-குர்ஆன் எரிப்பு: ஸ்வீடனுக்கு எதிராக கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள் - OIC கடும் எச்சரிக்கை.



ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது புனித குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பாரிய எதிர்ப்பலைகளை உண்டாக்கியுள்ளது. இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாம் மீதுமான வெருப்பை காட்டுவதற்காக குர்ஆனை எரித்துள்ளமை உலக முஸ்லிம்கள் மனதை பெரிதும் பாதித்துள்ளது.


இதற்கு சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளும் துருக்கியுள்ள முக்கியமான நாடுகளும் தமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளதுடன். உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் தனது கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.


இதுவொரு கேவலமான செயல். இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளதுடன், இதன் மூலம் ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வருகிறது.


போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் துருக்கிய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் இப்போது அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறுகிறது.


திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வினால் மனித குலத்திற்கு வழங்கப்பட்ட தெளிவான வழிகாட்டலாகும். முஸ்லிம்கள் அதனை தமது உயிரினும் மேலாகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். 


குர்ஆன் எரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள சுவீடன். நேட்டோ ராணுவ கூட்டணியில் சேர்வதற்கு முயற்சித்து வருகிறது. ஆனால், நேட்டோ உறுப்பினரான துருக்கி அதற்கு எதிராக உள்ளது. துருக்கி நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால், வேறு நாடுகள் அந்தக் கூட்டணியில் இணைவதை துருக்கியால் எதிர்க்கவும், நிறுத்தவும் முடியும்.


ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கு விண்ணப்பித்தன. அதற்கு துருக்கியின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, ஸ்வீடன் தலைநகரில் துருக்கிக்கு எதிராக வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன், துருக்கிய தூதரகத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று குர்ஆன் பிரதியை எரித்தார்.


துருக்கி, இஸ்லாமிய மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இந்தச் சம்பவத்தை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் “தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்” இது நடந்துள்ளது எனத் தெரிவித்தது.


“கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களை குறி வைத்து எமது புனிதமான விஷயங்களை அவமதிக்கும் இந்த முஸ்லிம் விரோத செயலை அனுமதிக்கும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இஸ்லாமோ ஃபோபியா, இனவெறி, பாகுபாடு ஆகியவை ஐரோப்பாவில் எச்சரிக்கை மணியை அடிக்கும் நிலையை எட்டியுள்ளன என்பதற்கு குர்ஆன் எரிப்பு சம்பவம் மற்றொரு சான்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க ஸ்வீடன் அரசாங்கம், “தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஸ்வீடனில் உள்ள துருக்கிய தூதரகம் முன்பாக குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இவையனைத்தும் ஸ்வீடன் அதிகாரிகளின் அனுமதியுடன் நடந்ததாகவும் அந்த அமைப்பு கடுமையாக சாடியுள்ளது.


இதே வேலை “ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று பாகிஸ்தான் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.


“இந்த அறிவில்லாத, ஆத்திரமூட்டும் இஸ்லாமிய வெறுப்பு செயல் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் என்றோ சட்டபூர்வமான செயல் என்றோ கூற முடியாது. இஸ்லாம் அமைதியின் மதம். இஸ்லாமியர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். இந்தக் கொள்கையை அனைவரும் மதிக்க வேண்டும், இஸ்லாமிய வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமை, வன்முறையைத் தூண்டும் முயற்சிகளுக்கு எதிராகத் தீர்வு காண முன்வருமாறு மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் தனியாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


“ஸ்வீடனில் வலதுசாரி பயங்கரவாதிகள் மேற்கொண்ட, புனித குர்ஆனை அவமதிக்கும் செயலைக் கடுமையாகக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. உலகெங்கிலும் உள்ள ஒன்றரை பில்லியன் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் புண்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவத்திற்கு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


விவாதங்கள், சகிப்புத்தன்மை, சகவாழ்வை ஊக்குவிப்பதில் சௌதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் நிராகரிக்கிறது,” என்று சவுதி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதித்த ஸ்வீடனையும் அதன்  அதிகாரிகளையும் கத்தார் விமர்சித்துள்ளது.


“இது இரண்டு பில்லியன் உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் மிகவும் தீவிரமான சம்பவம். கத்தார் மத அடிப்படையிலான அனைத்து வெறுப்புப் பேச்சுகளையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறது,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பரஸ்பர புரிந்துணர்வைப் பற்றிப் பேசிய கத்தாரின் வெளிவிவகார அமைச்சகம், வெறுப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றைக் கண்டிப்பதற்கான பொறுப்பைக் கையில் எடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த வாரம் நடந்த போராட்டங்களின்போது துருக்கிய அதிபர் ரசெப் தையிப் அர்துகானின் உருவபொம்மை விளக்கு கம்பத்தில் தொங்க விடப்பட்டது.


ஸ்வீடன் பிரதமர், “ஸ்டாக்ஹோமில் துருக்கிய அதிபரின் பொம்மையைத் தலைகீழாகத் தொங்கவிட்டவர்கள், நேட்டோவில் இணைவதற்கான ஸ்வீடனின் முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவதாக” கூறினார்.


கடந்த ஆண்டும், ராஸ்மஸ் பலுதன் குர்ஆனை எரிக்கப் போவதாக மிரட்டி பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடனில் போலீசாருக்கும் கோபமடைந்த  தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி: BBC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »