Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும். - முன்னாள் ஆணையாளர் மஹிந்த



கட்டம் கட்டமாக நிதியை வழங்கி, தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இளைஞர், யுவதிகளுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாவாகும்.


அதற்கான முற்பணம் மாத்திரமே தேர்தலுக்கு முன்னர் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றது. 150 மில்லியன் ரூபா முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். தேர்தலுக்காக முழுமையாக செலவிடப்படும் தொகை 10 அல்லது 8 பில்லியன் ரூபாவாகும். அது ஒரே தடவையில் கோரப்படாது. தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை அல்லது 3 பில்லியனே தேவைப்படும். அந்தத் தொகையை படிபடிப்படியாக செலுத்த முடியும். தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும்.


அவ்வாறெனில், 3 பில்லியன் ரூபா கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு இல்லாது விட்டால் சட்ட திட்டத்திற்கு அமைய, தேர்தல் ஆணைக்குழுவுக்கு, குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »