Our Feeds


Thursday, February 2, 2023

ShortTalk

வெல்லம்பிடிய கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் நிர்வாணமான நிலையில் நீச்சல் தடாகத்திலிருந்து மீட்பு



சில நாட்களுக்கு முன்னர்  காணாமல் போனதாகக் கூறப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தையில் உள்ள அவரது  சொகுசு  வீட்டின் நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சடலம் கண்டெடுக்கப்படும்போது நிர்வாணமாக  காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லம்பிட்டி, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க என்ற 49 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

கடந்த 30ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற  அவர்,  இதுவரை வீடு திரும்பவில்லை என உயிரிழந்தவரின் சகோதரியும் நேற்று முன்தினம்  (01) வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »