Our Feeds


Saturday, February 4, 2023

ShortNews

டான் பிரசாத்தின் சகோதரன் கொலை; நால்வர் கைது!



டொன் பிரசாத்தின் சகோதரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு வாள்கள் மற்றும் சந்தேக நபர்கள் கொலைக்காக வந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வெல்லம்பிட்டிய ஒருகொடவத்த மேம்பாலத்தின் கீழ் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »