அப்துல் அஸீஸ் பல்கலைகழக மாணவன் அனீஸ்
அமீனின் விளையாட்டு சாதனை!================================
சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை தொடரும் இலங்கை மாணவன் அனீஸ் அமீன் சவுதி பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று ஒளிரும் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த சவுதி பல்கலைக்கழகங்களின் விளையாட்டுக் கூட்டமைப்பு போட்டிகளின் 13வது அகவையில தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
மன்னர் பஹத் பெட்ரோலிய, கணிய பல்கலைக்கழகத்தால் இரண்டு நாட்களாக கதீஃப் நகரில் உள்ள பிரின்ஸ் நயீஃப் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற விளையாட்டு நடவடிக்கைகளில் 22 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை மாக்கொலை அன்வாருல் உளூம் அரபுக் கல்லூரியில் மார்க்க அறிஞராக பட்டம் பெற்று வெளியேறிய இவர் மன்னார்/ மரிச்சிக்கட்டியைச்சேர்ந்த காலம் சென்ற km அமீன் மற்றும் ரஹீமா உம்மா ஆகியோரின் கடைசிப்புதல்வராவார்.
தனது தொடரான முயற்சியின் மூலம் தனது ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து தந்த மௌலவி அனீஸ் இதற்கு முன்னரும் பல வெற்றிக்கிண்ணங்களை தனதாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.