ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது சபையின் அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழு தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், முன்னதாக அதன் தலைவர் பதவியை வகித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட குழுவில் இடம் வழங்கப்படவில்லை.
அந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி, விதுர விக்கிரமநாயக்க, நளின் பெர்னாண்டோ, ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன், சீதா அரம்பேபொல, சுரேன் ராகவன், அனுப பஸ்குவல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, நிமல் லன்சா, கே. சுமித் உடுகும்புர, இசுரு தொடங்கொட, பிரேம்நாத் சி. தொலவத்த, எம். டபிள்யூ. டி. சஹான் பிரதீப் விதான, சட்டத்தரணி மதுர விதான மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு முடிவடைந்ததன் மூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் காலம் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.