இலங்கையின் பிரபல யூடியூப் பயனாளர் சேபால் அமரசிங்க தொடர்பில் தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சேபால் அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தீலிபா பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு தனது தரப்பினர் மெய்நிகர் முறைப்பாடுகளுக்கு மன்னிப்புக் கோர விரும்புவதாக நீதிமன்றில் தெரிவித்தார். இதனை பரிசீலித்த சட்டமா அதிபர், சேபால் அமரசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என தீர்மானித்திருந்தார்.
இதேவேளை, இவ்வாறான குற்றங்களை மீண்டும் செய்ய மாட்டேன் என சேபால் அமரசிங்க பகிரங்க மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.
