Our Feeds


Monday, February 13, 2023

SHAHNI RAMEES

“இலங்கையின் இருப்பிடத்தின்படி, கடுமையான நிலநடுக்க அபாயம் இல்லை” - பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர்

 

புத்தல மற்றும் பெல்வத்தையை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மிகவும் குறைவான பாதிப்பினை கொண்டவை, எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உள்ள இந்திய – அவுஸ்திரேலிய நிலப்பரப்பு பகுதி சிறிது காலமாக பிரிந்து வருவதாகவும், அதன் விளைவுகளே கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் புத்தல மற்றும் பெல்வத்தையை அண்டிய பகுதிகளில் உணரப்பட்ட சிறிய நில அதிர்வுகள் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இந்து -ஆஸ்திரேலிய டெக்டோனிக் தகடு இலங்கையில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும், அதன் பிரிவினை காரணமாக, நாடு சில சிறிய அதிர்ச்சிகளை உணரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இது இந்து -ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கப்பட்டாலும், புவியியலாளர்கள் இப்போது அதை இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கிறார்கள், இதற்குக் காரணம் இந்த தட்டுகள் இப்போது தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதே என்று அவர் வலியுறுத்தினார்.

புத்தல மற்றும் பெல்வத்தை பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்க நிலைமைகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் கடந்த 10ம் திகதி மதியம் 12.10 முதல் 12.13 மணிக்கும் 11ம் திகதி அதிகாலை 03.00 மணிக்கும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 3 என்ற அளவில் இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் கூறினார்.

வெல்லவாய, புத்தல போன்ற பிரதேசங்களில் இதற்கு முன்னர் சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை அமைந்துள்ளமையினால் பாரிய நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »