அமெரிக்க நாட்டின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த டொர்னாடோ சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 23 பேர் இதுவரை இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல். அந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பொழிவு இருப்பதாகவும் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 160 கிலோ மீட்டர் அளவுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அந்த பகுதியின் அரசு மற்றும் அமெரிக்க நடுவண் அரசு உறுதி செய்துள்ளன. மிசிசிப்பி மாகாணத்தின் சில்வர் சிட்டி பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தகவல். இந்த சீற்றத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என மிசிசிப்பி மாகாண அவசரகால மேலாண் ஏஜென்சி அச்சம் தெரிவித்துள்ளது.