வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட சிறைச்சாலை கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று (25) வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ஓடிச்செல்கின்றார்.
அப்போது குறித்த கைதியை சிறை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று கைது செய்வதை கைத்தொலைபேசியில் நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சிறை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று கைது செய்யும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வவுனியா சதீஸ்