Our Feeds


Saturday, March 4, 2023

ShortTalk

விவசாய இரசாயனங்களின் தடையால் 24,000 கோடி ரூபா நட்டம்



உரம் உள்ளிட்ட விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக கடந்த வருடம் 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக கடந்த வருடத்தின் பெரும்போகத்தில், நெல் உற்பத்தி சுமார் 36 வீதத்தால் குறைந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

அத்துடன், கடந்த வருடத்தின் சிறுபோகத்தில் நெல் உற்பத்தி சுமார் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு நெல் உற்பத்தி 17 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன்னாக குறைந்துள்ளதுடன், அதன் பெறுமதி 175 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »