இரத்தப் பரிசோதனை, டெங்கு மற்றும் அன்ரிஜன் சோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக பணம் வசூலித்த குற்றத்துக்காக கொழும்பிலுள்ள 08 வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையினால் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் ஆய்வு கூடங்கள் இவ்வாறு அதிக தொகை வசூலித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் 3.5 மில்லியன் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.
இதேவேளை, கங்கொடவில நீதவான் நீதிமன்றம் – மீதமுள்ள மூன்று நிறுவனங்களுக்கு 2 மில்லியன் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.