உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல் நாளை (23) நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலுக்கான திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.