குவைத் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் பெட்ரோலிய பீடத்தினால் வருடா வருடம் நடாத்தப்படும் குவைத் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவரவரது நாடுகளின் கலாச்சாரங்களை, உடைகளை, உணவு வகைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி இன்று (21.03.2023) நிறைவு பெற்றது.
அந்தந்த நாடுகளின் கலை, கலாச்சார பழக்க வழக்கங்களை மற்ற நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் எடுத்துக் காட்டும் நோக்கில் மார்ச் மாதம் 19,20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற இக்கண்காட்சி மிகவும் அழகாக இருந்தது.
இலங்கை, எரித்திரியா, அல்ஜீரியா, தூனீசியா, பலஸ்தீன், ஸிரியா, லெபனான், குவைத், ஸஊதி அரேபியா, யெமன் ஓமான் உட்பட இன்னும் பல நாடுகளது மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை அழகுபடுத்தி இருந்தனர்.
குவைத் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் எமது மாணவச் செல்வங்கள் எமது தாய் நாட்டை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருந்தனர். இவர்களுக்கு குவைத் வாழ் இலங்கையர்களது வாழ்த்துக்கள்.
ஹரீஸ் ஸாலிஹ்