நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட பௌத்த பீடங்களான அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக அழுத்தத்தை ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்வார் என நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் சார்பான கொள்கைகளை அமுல்படுத்த அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டுமென மகாநாயக்க தேரர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்காக கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய கோட்பாடுகளின் அடிப்படையில் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது