2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டில் நிறைவடைய இருந்த நிலையில் தாமதப்படுத்தப்பட்ட கொழும்பு - மாலபே இடையிலான இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்ததன் பின்னர், திட்டத்தை மீள ஆரம்பிக்க ஆலோசித்து வருவதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது.
16 கிலோ மீற்றர் நீளமான 16 நிலையங்களைக் கொண்ட குறித்த திட்டத்துக்கு 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிட்பபட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய ஜப்பான் விஜயத்தின் போது ஜப்பானிய அரசாங்கம் இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.