கண்டி, தவுலகல ஹந்தஸ்ஸ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹந்தஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர் தனது சகோதரரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, தனது சகோதரரின் வீட்டாருக்கும் அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்து, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.