சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 331 ரூபா 71 சதமாக காணப்பட்டதுடன், அதன் இன்றைய பெறுமதி 316 ரூபா 84 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 349 ரூபா 87 சதமாக காணப்பட்ட பின்னணியில், இன்றைய தினம் அது 334 ரூபா 93 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.
24 கரட் தங்கத்தின் நேற்றைய விலை 180,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், அதன் இன்றைய விலையாக 175,000 ரூபா பதிவாகியுள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.