எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்வதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (a)