Our Feeds


Friday, March 10, 2023

News Editor

ரோஹித்தவின் கடன் அட்டை மாயம் – நீதிமன்றத்தில் விசேட அறிக்கை


 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர்களை இணையத்தில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

 

ரோஹிதவின் கடன் அட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி இலக்கம் 184 இல் உள்ள வீடொன்றில் இருந்து மாத்தறை வீடொன்றிற்குச் சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக முறைப்பாடு செய்துள்ளார்.

 

இந்நிலையில் இது தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதேவேளை ரோஹித ராஜபக்ஷ, எந்த தொழிலிலும் இருப்பதாக தகவல்கள் கிடைக்காததால், அவரது வருமான ஆதாரம் குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »