Our Feeds


Tuesday, March 28, 2023

ShortNews

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. 


இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 


இந்நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »