வெல்லவாய பிரரேசத்திலுள்ள எல்லேவெல நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் இன்று காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நால்வரும் நீர்வீழ்ச்சிக்கு குழுவாக சேர்ந்து சுற்றுலாப்பயணம் சென்றதாக தெரிய வருகிறது. காணாமல் போன 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு குறித்த இளைஞர்கள் நீராட சென்றதாக தெரிய வந்துள்ளது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் ஆபத்தான பகுதியில் குளித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.