தாய்லாந்தில் தனது 12 நண்பா்களை விசம் கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற பெண்ணை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
சராரத்துடன் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியூா் சென்ற அவரது தோழி ஒருவா் திடீரென உயிரிழந்தாா்.
இநத மரணம் தொடா்பாக சராரத் மீது அந்தத் தோழியின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடா்ந்து அவா்கள் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தனா்.
அதையடுத்து சராரத்திடம் விசாரணை நடத்திய பொலிஸார், அந்தத் தோழி தவிர தனது நண்பா்கள் மற்றும் நன்கு தெரிந்த மேலும் 11 பேரை சயனைட் விசம் கொடுத்து சராரத் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
கொல்லப்பட்டவா்களில் சராரத்தின் முன்னாள் காதலரும் ஒருவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.