Our Feeds


Sunday, April 23, 2023

SHAHNI RAMEES

20 ஜெர்மன் தூதர்களை வெளியேற்றும் ரஷ்யா..!

 


உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அத்துடன் ஜெர்மனும் கைகோர்த்துக் கொண்டது. 



ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனும் கலந்து கொண்டது. 



ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷ்யாவின் கவனத்திற்கும் சென்றது. 



இதற்கிடையே, ஜெர்மனில் இருந்து ரஷ்ய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில், ரஷ்யாவும் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது. 



இதன்படி, ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது. 



ஒட்டுமொத்த ரஷ்ய-ஜெர்மன் உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகின்றது என மாஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளது. 



இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஜகரோவா அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்கள் வெளியேறவுள்ளனர் என தெரிவித்துள்ளார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »