இங்கிரிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மூன்று பிள்ளைகளிடம் கசிப்பு வாங்கி வருமாறு கூறிய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்த, குறித்த மூவரையும், பாடசாலை புத்தகங்கள் மற்றும் சீருடையுடன் வீட்டை விட்டு துரத்திய தந்தை ஒருவரை இங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அவரது மனைவி இதற்கு முன்னர் இங்கிரிய பொலிஸில் ஏழு முறைப்பாடுகளை பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் அந்த முறைப்பாடுகள் அனைத்தும் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டன.
கைதானவர் தனது 9, 11 மற்றும் 13 வயதுடைய தனது பிள்ளைகளை அனுப்பி கசிப்பு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரது கிராமமான ரைகம்வத்தையில் தேடுதல் மேற்கொண்டதுடன், கசிப்பு காய்ச்சும் உபகரணங்களுடன் ஏழு பீப்பாய் கசிப்பை கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்தனர்.