எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எங்கள் குழுவில் உள்ளது.
அடுத்த தேர்தல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அந்த நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியாக சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.