Our Feeds


Sunday, April 16, 2023

News Editor

தெற்கு கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது


 இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவான போதைப் பொருட்களுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் போதைப்பொருளை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


இந்நிலையில் மீட்கப்பட்ட போதை பொருளின் அளவு மற்றும் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »