Our Feeds


Thursday, April 20, 2023

SHAHNI RAMEES

குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் - என வெளிவந்த செய்தி தொடர்பாக (ACJU) ஜம்இய்யா கவனம்...!


 ACJU/NGS/2023/126

2023.04.20  (1444.09.28)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு



எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் அனைத்து விதமான ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்தருள்வானாக


கண்டி ASP மற்றும் அலவத்துகொட OIC ஆகியோர், அக்குறணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கூறியது தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது.



இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடாத்தி தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக் கொண்டு வரவேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் தீய சக்திகளை அடையாளங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தமாறும் வேண்டி பொலிஸ் மாஅதிபர் சந்தன டி விக்கிரமரத்ன அவர்களுக்கு, ஜம்இய்யா கடிதமொன்றை 2023.04.19 ஆம் திகதி அனுப்பிவைத்துள்ளது.



அத்துடன் மேற்படி தகவல் தொடர்பில் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.


 


அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


 


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »