மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்யப்பட்டுள்ளன.
குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் பயணித்தபோது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரவீனின் தலையில் பலத்த காயம் இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த விபத்தில் பிரவீனின் தாயார் உயிரிழந்தார், அவரது சகோதரர் காயமடைந்திருந்தார்.
உயிரிழந்தவரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை தானம்செய்ய இளைஞனின் தந்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த வாரம், மூளைச்சாவு அடைந்த ஒரு யுவதியின் குடும்பத்தினர் ஏழு நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக அவரது உறுப்புகளை தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.